Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 MAR 1948
இறப்பு 02 SEP 2024
திருமதி லீலாவதி சந்திரசேகரி (பேபி, சந்திரலீலாவதி அம்மா)
வயது 76
திருமதி லீலாவதி சந்திரசேகரி 1948 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ். அச்சுவேலி தோப்பு, இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி சந்திரசேகரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மொன்றியல் மண்ணிற்குக் கிடைத்த பொக்கிஷமே!
பெற்றெடுத்த பிள்ளைகள் பெருமை கொள்ள
உற்றவர் உன்னதம் அடைய
 ஊரார் உங்கள் சேவையை எண்ணி பேருமை பேச
எல்லோரும் நண்பர்கள் அன்றி
 பகைவர்கள் இல்லை என்று
எமக்கு கற்று தந்துவிட்டு
நாடு விட்டு காடு சென்ற தாயே!
இளகிய நெஞ்சம் கொண்ட இனியவளே!

மொன்றியல் மக்களுக்கும் மண்ணுக்கும்
இனி யார் வருவார்
வீடு தேடி சேவை செய்ய?
இனி யார் வருவார்
மடிந்தவரை மயானம் அனுப்ப?
இனி யார் வருவார்
உன்னைப்போல் பேரப்பிள்ளைகளை பேணி வளர்க்க?
இனி யார் வருவார்
மருமகன்களை மகன்களாய் பார்க்க?
இனி யார் வருவார்
மகள்களை அள்ளி முத்தமிட்டு ஆசீர்வாதம் செய்ய?

எத்தனை முறை தேற்றினாலும்
தேறாத உள்ளம் தந்துவிட்டு
தேடிப்போனாய் ஈசன் அடி
 ஓயாமல் அழுகின்றோம்
ஓடிவரமாட்டாயா?
ஓடுவது நாட்கள்தான்
ஒரு மாதம் ஒரு வினாடி போல் ஓடி விட்டது
இன்னும் தேடுகிறது நெஞ்சம்
தேடிக்கொண்டே இருக்கிறது🙏🏻
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 02-10-2024 புதன்கிழமை அன்று முற்பகல் எமது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியபோசன நிகழ்வு 05-10-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை (8365-8377 Boul Langelier, Montréal, QC H1P 2C3) எனும் முகவரியில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்