திதி:01/08/2026
யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனதம்மா.......
ஒரு நிமிடம்
அம்மா....
கொஞ்ச நேரம் என் கூட இப்ப அருகில் இருக்கமாட்டீங்களா
என்று தவிக்கின்றேன்
அம்மா....
உங்கள் குரல் அப்பப்ப ராகினி ராகினி என்று என்காதில் ஒலிக்க அம்மா ....
என்று எனக்கு நானேதிரும்பிப்பார்க்கின்றேன் காணவில்லை ஆனால்
உங்க குரல் மட்டும் எங்கிருந்து வருகின்றது அம்மா
என்னைவிட்டு எங்கே மறைந்தீர்கள் அம்மா
இந்தப் பிறவியில் மட்டுமல்ல அடுத்தபிறவியிலும்
நீங்கள்தான் என் தாயாகப்பிறந்து
என் பிள்ளைகளுக்கும் வழிகாட்ட வேணும் ....
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து மோட்சமடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி !!!
உங்கள் நினைவுகளோடு கடல் கடந்த....
உங்கள் அன்பு மகள் ராகினி, ரவீந்திரதாசன், அரன்ஜா, அபிலாஷ்