1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 28-04-2023
யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த குருநாதன் கமலாதேவி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்