Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 DEC 1930
மறைவு 28 JUN 2011
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
வயது 80
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் 1930 - 2011 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டிக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Mt. Druitt, Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.    

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Kaddaively Methodist Church, Kaddaively, Sri Lanka எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்