1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 FEB 1951
இறப்பு 19 OCT 2020
அமரர் குணசிங்கம் சோதிநாதன்
முன்னாள் முகாமையாளர்- Maruthi Traders Colombo, SC Jayawardena & Co
வயது 69
அமரர் குணசிங்கம் சோதிநாதன் 1951 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், நல்லூர் அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணசிங்கம் சோதிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஓடி மறைந்ததையா உங்கள்
அன்பு முகம் காணாது துடிக்கின்றோம்
காலங்கள் உருண்டோடி விட்டதையா
கண்ணிமைக்கும் பொழுதினிலே எல்லாமே
முடிந்து போனதையா

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்