யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், நல்லூர் அம்மன் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் சோதிநாதன் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம்(ஓய்வு பெற்ற நேரப் பொறுப்பாளர் இ.போ.ச), புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி(வீரசிங்கம்- வேலணை மேற்கு முன்னாள் கிராம சபைத் தலைவர்), பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபேந்திரன், சுஜேந்திரன், சுவேரகா, சுகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேபிசரோசா(சுவிஸ்), பேரின்பநாதன், கணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதாரரும்,
யோகமலர், காலஞ்சென்ற சந்தனரூபி, திருக்குமாரன்(லண்டன்), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமசாமி விமலேஸ்வரி, லதா, சந்திரபாலன், தேவதாஸ், திருமகள்(லண்டன்), செல்வகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பவிஷன், அதிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.