
திதி: 01-08-2025
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், சிவபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நவரெட்ணசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாம் ஆண்டு நினைவலை!
ஆண்டு மூன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால் எம்மடியில்
வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.