யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், சிவபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நவரெட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீங்கள்
இமைப்பொழுதில் எம்மை விட்டு சென்றீர் என்று..!!!
அன்பிற்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
தரணியிலே என் அருகில்
எம் துணையாய் வாழ்ந்த என்னவரே
இவ்வுலகை விட்டு பிரிந்ததுதான் ஏனோ?
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் இல்லாத உலகம் இருள் ஆனதே..!!!
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
அன்பையும் அறிவையும் அதிகமாய் தந்து
எனை வளர்த்த அப்பாவே
இந்த அவனியிலே எமை தவிக்கவிட்டு
அமைதியாய் சென்றீர்களோ
தூக்கி வளர்த்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
எல்லோரும் கதிகலங்கி கண்ணீரை நிரப்பி நிற்க
விண்ணுலகம் விரைந்தீரோ !
ஆசைப் பேரப்பிள்ளைகள் தாத்தா அப்பப்பா என்று
கதரி அழுத நினைவுகள் இன்றும் நெஞ்சில் நிழலாடுதே !!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் மனைவி, பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்,
உற்றார் , உறவினர்கள்..
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.