யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், சிவபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நவரெட்ணசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12/08/2024
இரண்டாம் ஆண்டு நினைவலை!
இரண்டாண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது எங்கள் இதயம்
உங்கள் இனிய புன்னகையை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும்போதே- உங்களை வாரி
அணைத்துக் கொண்டானே!
அந்த இறைவன் வலி தாங்க
முடியாமல்
நாங்கள் வாழ்நாள்
முழுவதும்
துடித்து நிற்கின்றோம்!
ஒரு நாளும் மாறாது- எம் சொந்தம்
எங்கள்
உயிரோடு உயிர் சேர்ந்தது
உந்தன் பந்தம்
ஆண்டு இரண்டு சென்றாலும்
- எம்
மனங்களில் நிறைந்திருக்கும் அப்பா...
இறப்பது வாழ்வில் இயற்கையின்
நியதி
நீங்கள்
பிரிந்ததுதான் - எங்கள்
இதயத்தை வாட்டுது
காலங்கள் கடந்து
போனாலும்
இன்னும் கண்ணீர்
மட்டும் ஓயவில்லை
இன்றும் நீங்கள் எம்மோடு வாழ்ந்து
கொண்டே இருக்கின்றீர்கள்
என்றும் நீங்காத சோகம்
எம்
நெஞ்சங்களோடு
ஈரவிழிகளுடன்
உந்தன்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.