அம்மம்மா அண்மித்த காலங்களில் நம்மால் பேச கூட முடியவில்லை ஆனாலும் உங்கள் கால் இடுக்குகளில் அதிகமாய் கண்ணயர்ந்தது நான் மட்டுமே விபரம் அறியாத பருவத்ததில் எப்போதும் உங்களுக்கு வழி துணையாய் இருந்திருக்கிறேன்….. அறியாது செய்த பிழையால் இறுதிவரை பேசாமல் போவோம் என்று எண்ணவில்லை அம்மம்மா ஆயிரம் பழம் கதைகள் உங்களை பற்றி என் பிள்ளைகளிடம் பேசினாலும் உங்கள் குரலை கூட அவர்களின் மனதில் பதிய வைக்கமுடியவில்லை…… அன்பொன்றால் இழந்து விட்டேன் அனைத்தையும்…………. அம்மம்மா-இனி என்று எங்களைப்பேன் மனிதரின் வாழ்வு மணித்துளியுமல்ல……….. மன்னியுங்கள் அனைவரையும் குறுஞ்செய்திகளில் அனுப்பும் அளவு உறவுகளின் பிரிவு ஒன்றும் அத்துனை எளிமைஅல்ல ஏற்றுகொள்ள.….. ஆறுதல் சொல்ல கூட எனக்கு எவருமில்லை அம்மம்மா நான் மட்டும் இன்னும் அனாதையாய் இங்கு உங்கள் ஆன்மா அமைதியாய் சாந்தி அடையட்டும் விழி நீர் சொரிகின்றோம் உங்கள் பிரிவால்