3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மூன்றாண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
மூன்றாண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்