Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 12 JUL 1948
விண்ணில் 22 JUL 2022
அமரர் குமாரசாமி நாகரத்தினம் (ராணி)
வயது 74
அமரர் குமாரசாமி நாகரத்தினம் 1948 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிகளும் உன்னைத் தேட
விடியல் பல தனித்து ஓட
வழிகளும் ஏதும் உண்டோ
வையகம் நீ மீண்டும் காண…
ஆண்டுகள் இரண்டு போகும்
அகிலமும் உருண்டு போகும்
ஆயினும் உந்தன் அன்பு அகலுமா நெஞ்சை விட்டு…
என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பீர் என
எண்ணிலாக் கனவுகள் கொண்டிருக்க
இடை நடுவில் காலன் பிரித்ததேனோ…

நீ கண்ட கனவுகளை எல்லாம் எம் தோளில் இறக்கி விட்டு
இறையடி சேர்ந்தாயோ கனவுகள் தீர்ந்ததென்று…
மறைந்த நாள் முதலாய் நிம்மதி இன்றி தவிக்கின்றோம்
மடியினில் மறுமுறை தலைசாய்த்திட மாட்டோமா என்று…
எண்ணிலடங்கா ஆசைகள் எல்லாம் ஏக்கங்களாய் மாற
என்னவள் உறங்கினாளோ எல்லையில்லா தூரம் சென்று…
மண்ணோடு உன் பூவுடல் சாய்ந்தாலும்
எம் மனதோடு என்றும் துளிர்விடும் உன் மாயாத நினைவுகள்…
விழிநீர் பூக்களால் உன் பாதம் தான் நனைத்து
விடியலை வேண்டுகின்றோம்
உன் ஆத்மா சாந்தியடைய... 

தகவல்: குடும்பத்தினர்