

-
25 OCT 1938 - 25 JUL 2019 (80 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : முகமாலை, Sri Lanka பிரான்ஸ், France
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 01-08-2021
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எங்கள் பெரியம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த இரங்கலை தெரிவித்து தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய...