1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி
வயது 80

அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி
1938 -
2019
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே சிவமாய்
பண்பிலே சிகரமாய்
பாசத்திலே கடலாய்
இரக்கத்திலே இமயமாய்
கருணையே உருவமாய்
ஒரு தாயின் முழுவடிவமாய்
எங்கள் இல்லத்தில் நிறைந்த இலட்சுமியே!
உங்களோடு வாழ்ந்திட்ட
நாட்கள்தான் சொர்க்கமாகும்!
நீங்கள் எங்கிருந்தாலும் எமை வாழ்த்தி
வரம் கொடுக்க வந்திடம்மா!
எம் விழி நீர் துடைக்க
உம் கரத்தை தேடுகின்றோம்!
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் பெரியம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த இரங்கலை தெரிவித்து தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய...