திதி: 10-07-2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்ப நாயகனே!
அன்புள்ள அண்ணாவே!!
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் எட்டு ஆனதடா ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் போல் ஆகிடுமா!
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்... திகழ்ந்த எம் சகோதரனே...!
ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு
எங்கே நீசென்றாய்?
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைத்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோம்...
உங்கள் நினைவுகளை சுமந்து வாடுகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்...