3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
(சிவா)
வயது 54

அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
1968 -
2022
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : 12-07-2025
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் சிவானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய்
இயங்கிய இனிய ஜீவன்
அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும் கடைசி
வரை உங்கள் நினைவு எம்
நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி, மகன்