1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
(சிவா)
வயது 54

அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
1968 -
2022
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் சிவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-07-2023
பொன்னழகு உன் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்!
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை!
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர தேசம் நீங்கள் சென்றதேனோ?
உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை!
பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றாயோ?
எம்மை அன்பால் அரவணைத்த உறவே
அமைதி கொண்டது ஏனோ?
உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே!
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே!
உனையிழந்து உன் மனைவி, மனனோடு
உடன்பிறப்புகளும் தனியானதே!
உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
மனைவி , மகன்