யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சிவானந்தன் அவர்களின் 45ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
நாட்கள் 45 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீ
தோன்றுவதாய் எண்ணி...!!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், தமிழர் ஒற்றுமை கழகம் அவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது”
அன்னாரின் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும் 30-07-2022 சனிக்கிழமை அன்று 10:00 மணியளவில் Pfarreizentrum Dreitannen, Frauenfelderstrasse 3, 8370 Sirnach என்னும் முகவரியில் நன்றி நவிலலும் விருந்தோம்பலும் நடைபெறும்.
எமது குடும்பத்தின் பிரிவுத்துயரில் கலந்து கொண்டு பல வழிகளிலும் உறுதுணையாகவிருந்து ஆற்றுப்படுத்திய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, 45ம் நாள் அந்தியேட்டி நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.