யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் சிவானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:23/06/2024
அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!
ஆண்டு இரண்டு ஆனதுவே
ஆறவில்லை எம் துயரம்
வையகம் தன்னில் வாழ்வாங்கு
வாழ்ந்து வழிகாட்டிய தெய்வமே
உங்கள் அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சிலிருந்து
என்றென்றும் மாறாது மறையாது
இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?
கடமையெல்லாம் முடிந்ததென்றா
காலன் உங்களை கவர்ந்தெடுத்து
எம்மை கண்ணீரில் மூழ்கவிட்டான்?
அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
பாசத்தை ஊட்டி பாதி வழியில்
கைவிட்டு மீளாத்துயில் கொண்டு
மண்ணுலகை விட்டு மறைந்தாலும்
உங்கள் மாண்புறு பெருமைகள்
எங்கள் மனங்களில்என்றும் வாழும்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!