2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை
வயது 45
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
1977 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷாந்தினி பத்மசோதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்...
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை...
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை...
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உம் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்