1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை
வயது 45
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
1977 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷாந்தினி பத்மசோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று உதிர்ந்தாலும்
அம்மாவின் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
இதழ் விரிகிறது...!!!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்