Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 MAR 1979
இறப்பு 15 OCT 2021
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் (தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் 1979 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கார்த்திகை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்(தயா) அவர்களை நினைவுகூறுபவர்கள் அன்பு மனைவி தாரகா, அன்புப்பிள்ளைகள் கேதுசா, அனன்யா, ஆதிஷ், அன்புச்சகோதரர்கள் கேதாரரூபன், இன்பரூபன், ஞானரூபன் மற்றும் அவரது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்கின்றார்கள்.

31 நாட்கள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
உங்களை 
நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய இயலாமல் தவிக்கின்றோம்.
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே இனி வரும் காலம்
நாம் இங்கே தனித்து வாழ்வோமே!

எங்களுக்கு என்றும் துணையாக இருந்து
என் பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்துவீரே!
மனம் என்றும் ஆறாத்துயரோடு மீளாத்துயில் கொண்ட
எங்களின் தலைமகனின் ஆத்மா சாந்தியடைய

எங்கள் இரு கரங்களில் மலர் எடுத்து மலர்தூவி
இறைவனோடு இணைய வேண்டி அஞ்சலி செய்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் 31ம் நாள் நினைவை இட்டு நடாத்தப்படும் நினைவஞ்சலி நிகழ்விலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டு அவரை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைவஞ்சலி நடைபெறும் இடம்: Nem Viet, 8 Porte de Neuilly, 93160 Noisy-le-Grand, France

நினைவு நடைபெறும் நாள்: 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை

நினைவு நடைபெறும் நேரம்: மதியம் 12:00 தொடக்கம் 15:00 வரை


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்