4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
நான்கு வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்...!
தகவல்:
குடும்பத்தினர்