Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 MAR 1979
இறப்பு 15 OCT 2021
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் (தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் 1979 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை நாம் சுமந்து நின்று..
மூன்று ஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!
மனம், புலம்பிப் புலம்பி நொந்து நிற்க
பிள்ளைகள் நலனுக்காய் வாழ்ந்து வருகின்றேன்
நீர்செய்யும் பணி அனைத்தும்..
நான் தன்னந்தனியாக சுமந்து நிற்கின்றேன்
தாங்காத சுமையதனை தந்து போய்விட்டீரே..!

நீங்காது எம் மனதில் நிலைத்து நீர் நின்று- என்னை
நிமிர்ந்து பணி செய்ய இயக்கி நிற்கின்றீர்
கண்ணீர் கோலத்தில் நாங்கள்...
கலங்கி நின்றோம்! நிச்சயம்
கலங்கி நீரும் தவித்திருப்பீர்
என்றும் எங்களோடு ஒன்றாகி நீர் நின்று
எங்களை வழிநடத்த வேண்டுமையா!

எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!  
 
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!

என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உம்மோடு செலவழிக்க எண்ணினேன்- இன்றோ
நீங்கள் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!!

கண்களில் எம்மைச் சுமந்த நீங்கள்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர்கள் காற்றில்!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos