யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்திசங்கர் மார்க்கண்டு அவர்களின் நன்றி நவிலல்.
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த
உறவுகளை கைவிட்டு சென்றதேனோ
பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
நின் உறவின் அடிதேடி துடிக்கின்றதே
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கி சென்றாலும்
கண்விட்டு மறையாமல்கனகாலம் இருப்பீர்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
He left a positive imprint within us and lets cherish it.