யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திசங்கர் மார்க்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-04-2023
ஈராண்டு கடந்த பின்
உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி
தீராத வேதனையை
மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில்
நாமும் வாழ்கின்றோம்..
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ!
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று
எமையெல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி
இரண்டாவது ஆண்டு
நினைவு நாளில்
விழி அருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உமைப்பார்த்து!!
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும்
கண்முன்னே நிழலாடும்
உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாம் எல்லோரும் பிரார்த்திக்கின்றோம்!
He left a positive imprint within us and lets cherish it.