மாமாவிற்கு மனம் திறந்து எழுதும் இந்தய அஞ்சலி எங்கள் ஆசை மாமா பாச மாமா அன்பின் மணிய மாமா அம்பலம் குடும்பத்தின் இளைய மருமகனே மாவை ஊர் தந்த மருக்கோழுந்தே மைத்துனர்மார் மைத்துனிமார் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்த்தவரே கட்டிய மனைவிக்கு நல்லதோர் கணவராக ஓன்பது பிள்ளைகட்கும் நல்லதோர் தந்தையாக மருமட்கள் பிள்ளைகளுக்கு நல்ல மாமனாக பேரப் பிள்ளைகளுக்கு நல்லதோர் பேரனாக பூட்ட பிள்ளைகளுக்கு நல்லதோர் பூட்டனாக உற்றர் உறவினற்கு நல்ல சொந்தமாக ஊரவர் மத்தியில் மதிப்பு மரியாதை மிக்கவராய் மானிட வாழ்வில் நல்ல மனிதம் உள்ளவரைய் வாழ்ந்த மாமனிதா கஷடம் என்று வந்தாலும் கையெந்தேன் கடவுள் விட்ட வழி என்று வாழ்த்தவரே உறவுகளை கண்டவுடன் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஓடுகின்ற ஓடத்தை நாம் அறிவோம் இடறர்கள் பல பட்டு உறவுகள் உங்கள் இடம் தேடி வந்த போது எல்லோரையும் இடம் கொடுத்து உதவிய பெருந்தகையே உங்கள் மன உறுதி என் மனதை தொடட் து இருக்கும் இடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உன்பேன் என்று இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வாழ்த்தவரே என் நினைவில் நிற்பதை சொல்வதில் தவறு இல்லை என் சிறு பராயத்தில் உங்களை பார்த்த இடம் எங்கள் பாரம்பரிய வீட்டில் என்னை பாடு பாடு என்று பாட வைத்து கேற்பீர்கள் எனற்கும் ஓர் ஆசைதான் பக்கத்தில் வந்திருந்தால் நாவார நாலு தேவாரம் பாடி இருப்பேன் இருந்தாலும் பரவாயில்லை இங்கு இருந்து பாடுகின்றேன் என் பாட்டு காற்றின் அலையோடு கீதங்கலாய் உங்கள் காதில் விழும் பாடகைக்குள்ளும் என் பாட்டு ஓளிக்கும் தொடரட்டும் உங்கள் இறுதி யாத்திரை உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் இங்கணம் உங்கள் மருமகன் நாகரசா சிவபாதசுந்தரம்
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...