யாழ். மாவிட்டபுரம் வீமன்காமம் புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு சுப்ரமணியம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 17-01-2024 புதன்கிழமை அன்று மு.ப கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...