Clicky

மலர்வு 31 OCT 1929
உதிர்வு 20 DEC 2023
திரு கதிரேசு சுப்ரமணியம் 1929 - 2023 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவராசா இராஜபுத்திரன் 22 DEC 2023 France

சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது வீட்டில் தான் தங்கினோம். அங்கேயே வீடும் அமைத்து நீண்ட காலம் அங்கேயே குடியிருந்தோம். உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது வழக்கமான ஒரு விடையம் என்றாலும், எம்மை போன்று பல குடும்பங்களுக்கு தனது வீட்டிலும் வீட்டுக் காணியிலும் இடமளித்து வீடமைத்து வாழ முழு மனதோடு இடமளித்தார். உறவினரின் உறவினருக்கெல்லாம் இடமளித்தார். வன்னியில் பல தடவைகள் இடம் பெயர்ந்து மீண்டும் அங்கு சென்ற போதெல்லாம் எப்போதும் எம்மை வரவேற்றார். வயதானவர்கள், குழந்தைகள் என ஆறேழு குடும்பங்களை அணைத்து இடமளிப்பது சாதாரண விடையம் அல்ல. மற்றவரை வீட்டிற்க்குள் உறங்க வைத்துவிட்டு தான் முற்றத்தில் தூங்கியவர். ஓரு கணமேதும் அவர் முகம் சுழித்தது கிடையாது. அவரின் நல்ல உள்ளத்துக்கு அன்றய காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களே சான்று. பெரிதாக எதற்கும் ஆசைப்படாத மிக எழிமையான மனிதர். அவரது குடும்பமே அவரது வாழ்வு. அவரை அறிந்தவர்கள் உறவினர்கள் வாழும்வரை அவரது நினைவுகளும் வாழும். உங்களது பிரிவால் வாடும் மாமி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எமது ஆறுதல்கள். சிவராசா இராஜபுத்திரன்

Tributes