யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே ஆழ்ந்த அனுதாபங்கள் தர்மராஜா குடும்பம்.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Abinayan, Aaravan, Aarushi.
வையகம் வாழ்த்த வாழ்ந்து, வானுறையும் தெய்வமதாய் காலத்தினுள் கலந்திட்ட அன்னார் ஆண்டவன் சந்நிதியில் அமைதியாய் துயிலட்டும்! அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அகத்தில் இருந்து..!