Clicky

18ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1980
இறப்பு 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் இதயத்தோட்டத்தில்
 ஓயாது பூக்கிறது சோகம்!
எந்நேரமும் தண்ணீர் பாய்ச்சுகின்றது
 எங்கள் இருவிழிகள்!

இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ

சோகம் தனிமையில் கூட வரும் ஆனால்
உண்மையான சந்தோஷம்
அன்பானவர்கள் இருக்கும்போது மட்டுமே வரும்
எனது வாழ்வில் ஒரு உதயம் பிறந்தது
அந்த உதயம் மறைந்து 18 வருடமாகியதே

வாழ்வியல் தத்துவம் நாங்கள்
அறியாது தவிக்கின்றோம்
பிறப்பும் இறப்பும் உலக
இயக்கத்தின் கட்டாயம்,
ஆனால் பாசமும் பந்தமும்
பிரிவில்லாத் தொடர் வலைகள்!

தகவல்: குடும்பத்தினர்