Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1980
இறப்பு 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
 உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
 எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
 தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்......!!!

தகவல்: குடும்பத்தினர்