Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1980
இறப்பு 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்னும் சில நாள்
இப்படியே உறங்கிடுங்கள்
கவலை கொள்ள வேண்டாம்
கல்லறை துயில் தொடங்குங்கள்
ஓர் நாள்
தமிழிழம் பிறக்கும்
தனி ஈழம் அமைக்க
உங்கள் துயில் கலைத்திடுவோம்
அப்போது வந்திருங்கள்....
அதுவரை உறங்கிடுங்கள்
உங்கள் மரணத்தில்
நாங்கள் பிறப்பு கண்டோம்
உங்கள் வீரத்தில் வளர்ந்து வந்தோம்
உங்கள் வழியில் வென்றெடுப்போம்
தமிழ் ஈழம்

விடுதலைக் கனல் சுமந்து
வீணர்கள் படை எரித்து
தமிழீழ மீட்புக்காய்
களமாடி வீழ்ந்தவரே!
மண்காத்த மறவர் உம்மை
மனதோடு சுமக்கின்றோம்
நீர் விதையான மண் பார்த்து
கண் சொரிந்து தவிக்கின்றோம்...
எந் நாளும் அழியாது
உம் தியாக வரலாறு
விளக்கேற்றி துதிக்கின்றோம்
விரைவில் உம் பணி முடிப்போம்.

தகவல்: குடும்பத்தினர்