5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 5 ஆனாலும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 5 ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
பஞ்சு சித்தப்பா நினைவுகள் இன்றும் எங்களுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாள் அருள்புரிய வேண்டி கொள்கின்றேம்