3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!
உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும்
மீண்டும் வேண்டும் என
உங்களைத் தேடுகின்றோம் அப்பா!
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
பஞ்சு சித்தப்பா நினைவுகள் இன்றும் எங்களுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாள் அருள்புரிய வேண்டி கொள்கின்றேம்