Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1940
இறப்பு 02 NOV 2019
அமரர் கந்தவனம் தேவசிகாமணி (சம்மாட்டியார்)
வயது 79
அமரர் கந்தவனம் தேவசிகாமணி 1940 - 2019 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நாட்கள் நகர்ந்தன
நான்கு ஆண்டுகள் கடந்தன
ஆனால் - நாவில் உம் பேச்சு
நினைவு மாறவில்லை அப்பா...!

அன்பின் பெருமையை உணர்த்திய தெய்வமே சற்று
ஆற்றல் இழந்து ஆறிய காலம் தானோ
இருக்கும் வரை இன்பம் எனும்
இனிய வாழ்வை அளித்தீரே...

எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!

எங்கள் மீது நீங்கள் காட்டும்
பாசத்தை, பரிவை,
கரிசனையுடனான கண்டிப்பையும்,
எம்மால் என்றென்றும் மறக்க முடியாது.

உங்கள் இனிய செயல்கள் மூலம்
எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.
நான்காண்டுகள் என்ன
எத்தனை ஆண்டு சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களுடன் வாழும்!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்