Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1940
இறப்பு 02 NOV 2019
அமரர் கந்தவனம் தேவசிகாமணி (சம்மாட்டியார்)
வயது 79
அமரர் கந்தவனம் தேவசிகாமணி 1940 - 2019 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!

உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
 உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

உங்கள் அன்பும் அரவணைப்பும் என்னை
வாட்டி எடுக்குதப்பா
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள்
எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்