யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தர் வைரமுத்து அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டும் உருண்டுபோனது தந்தையே!
வைரமாய் அனைவரின் உள்ளங்களிலும்
ஒளியேற்றி முத்தாய் தடம் பதித்த
எங்கள் வைரமுத்து நீங்களன்றோ..!
தங்கள் ஈரமான நினைவலைகள் இன்னும்
எம் மனங்களில் உறங்காமல் ஊசலாடுகிறது!
உறவுகள் அனைவரையும் தவிக்கவிட்டு
இறையினை நாடி விட்டீர்களே!
வானத்து நிலவென அனைவருக்கும் பொதுவாய்
அரும் பணிசெய்த ஆசான் நீங்கள்!
விதிவந்து சதிசெய்து விட்டதென
மதிநொந்து தினந்தினம் தவிக்கிறோம்!
அன்பால் பண்பால் ஆழுமையால்
அன்னையாகித் தனை உவந்தளித்த உத்தமரே!
உந்தனுயிரை எம்மீது பணையமாக்கி
எமக்காகத் தங்கள் வாழ்வின் வயதைக் குறைத்ததேனோ ?
எம் வாழ்வுள்ளவரை எம் நெஞ்சாங்கூட்டினுள்
உங்கள் ஆன்மா துடித்துக் கொண்டேயிருக்கும்!
பெற்ற பிள்ளைகள் நாம் சுற்றியிருக்க
கைபிடித்த மனைவி அருகிருக்க
பேசாமல் எமைக் கைவிட்டீர்களே!
இன்னொரு பிறவி உண்டெனில் மீண்டுமெமக்குத்
தந்தையாகி எமைக் காக்க வருவீர்களாக!
எம் உயிர்மூச்சும் உடல்பொருளும்-இன்று
நாம் பெறும் இன்பங்கள் அனைத்தும்
நீங்கள் தந்ததது தான் அய்யனே!
உங்கள் பிரிவால் வாடிநிற்கிறோம்!
எமைத் தேற்ற இனி யார் வருவார்?
பேச மொழியின்றி விழியில் நீரின்றி
பட்டமரமாகிப் பரிதவித்து நிற்கின்றோம் தந்தையே!
இப்போ மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளீர்கள்!
கலையாத நினைவுகளுடன் உதிரும்
கண்ணீர்ப் பூக்களால் பூசித்து வணக்குகிறோம்!
உங்கள் ஆன்மா இறையிடம் கலந்திட
எம் அனைவரின் உணர்வுகளால் தொழுதேத்துகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பாசத்துடன் அரவணைக்கும் அன்பினுருவே!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி ரஷீனா,
பிள்ளைகள் : நக்கீரன், நெடுமாறன், செந்தூரன் டொரினா, டோட்டி,மீரா
மருமக்கள்: சிவயோகராணி, சர்வினி, சிவரூபி, ஜெகராசா, சுதர்சன், சிறிஸ்கந்தராசா,
பேரப் பிள்ளைகள்: பிரணன், அபிரன், அபினன், சஹானா, கரிஷ், விஷ்ணு, அபிராமி, அகத்தியா, தக்ஷரா, பவித், துசன், சேனன்
மற்றும்
உற்றார், உறவினர் , நண்பர்கள்
BUT GRANDPA S NOT TRULY GONE, BECAUSE HIS MEMORY LIVES ON, IN ALL OF US WHO LOVED HIM, NEVER TO BE FORGOTTEN.