யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தர் வைரமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு வணக்கம்
ஓராண்டு உருண்டாலும் உங்கள் திருமுகம்
எங்கள் உள்ளம் விட்டகலவில்லை
சொல்லி அழுது புலம்புகிறோம் -இந்தச்
சோகத்தைத் தாங்க முடியவில்லை
பாசத்தை அள்ளி ஊற்றிவிட்டு - இத்
தேசத்தை விட்டுச் சென்றதேனோ
உங்களைக் காணத் துடிக்குது
மீண்டும் ஒரு கணம்!
காலன் ஏன் விரைந்து வந்தான்?
காணும் எனக்கினியென இவ்வுலக
வாழ்விலிருந்து விரைந்தீர்களா?
சிரித்துப் பேசியது இக்கணமாயிருக்க
நிகழ்ந்தது நியமா என
நினைக்கமுடியவில்லை ஒருபொழுதும்
நற்கல்வி பயிற்றி நற்பண்பு புகட்டி
நலமுடன் நல்வாழ்வு வாழ
நல்வழி தேடித் தந்த
எங்கள் தீபச் சுடர் !
குடும்பத்தில் மூத்தவராய்
திடமுடன் நேர்வழி காட்டினீர்கள்
ஊரில் அனைவரையும்
உத்தமனாய் வளர்க்க உதவினீர்கள்
அனைவருக்கும் ஆசானாய்
அறிவுக்கண் திறந்தீர்கள்
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
உங்கள் நினைவில் வாடுகிறோம்
எங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
BUT GRANDPA S NOT TRULY GONE, BECAUSE HIS MEMORY LIVES ON, IN ALL OF US WHO LOVED HIM, NEVER TO BE FORGOTTEN.