Clicky

பிறப்பு 23 OCT 1951
இறப்பு 01 NOV 2021
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
வயது 70
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம் 1951 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Late Kuganesan Family,Sivakumaran , Kumaraguruparan, GnanasekaranLate Pooranam Balachandran& 05 NOV 2021 Canada

நல்லதோர் மகளாகவும்  ,மனைவியாகவும்  ,தாயாகவும் அம்மம்மாவாகவும்,பூட்டியாகவும்  விளங்கிய எங்கள் மாமி  .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தான் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்தார்.எல்லோரும் போற்ற பாரில் சீரோடும் ,சிறப்போடும்  வாழ்ந்தார் .வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்திடம்  ஆனந்த  நித்திரை கொள்ள  சென்றுவிட்டார்.அவர் வாழ்க்கையைகொண்டாடுவோம்.அவர் காட்டிய வழியில் நடந்து செல்வோம்  .ஆனால் கடல் தேடும் ஆறுகள் பிரிவினால்  கலங்குவதில்லை விண் தொடும் நட்சத்திரங்கள் அழுவதும் இல்லை.பின்னர் அறிவு நிறைந்த மனிதா ஏன் மயக்கம் ஏன்? இதுவே விதி .ஆறுதல் கொள் மண்ணில் பிறந்தோம் .மண்ணுக்குள் சேர்ந்தோம் .ஊனும் ,எலும்பும் கொண்ட சரீரம் என்றோ ஒரு நாள் அழிந்து விடும் .ஆனால் நீங்கள் உருவாக்கிய எச்சங்களான பிள்ளைகள் வடிவில் ,நீங்கள் சேர்த்த புகழினாலும் ,மேன்மையினாலும் இந்த பூமியில் நீடூழி வாழ்வீர்கள்!!மாமியின் ஆத்மா  சாந்தி பெற நாங்கள் வணங்கும் இறைவனின் பாதங்களில் எம் கண்ணீர் பூக்களை சமர்ப்பித்து பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"குறள்