Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 OCT 1951
இறப்பு 01 NOV 2021
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
வயது 70
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம் 1951 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்ணம்மா சோமசுந்தரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-11-2025

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
 பிரிந்தது தான் ஏனோ!

மென்மையான உள்ளம் கொண்டு
 உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே!

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா- ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
 உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே!

நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே- உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
 உயிர் எம்முடன் தான் இருக்கிறது!

 எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா...


உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்