யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-12-2021 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
நல்லதோர் மகளாகவும் ,மனைவியாகவும் ,தாயாகவும் அம்மம்மாவாகவும்,பூட்டியாகவும் விளங்கிய எங்கள் மாமி .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தான் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்தார்.எல்லோரும் போற்ற...