Clicky

அன்னை மடியில் 06 APR 1947
ஆண்டவன் அடியில் 14 DEC 2022
அமரர் கந்தையா ஆறுமுகசாமி
முன்னாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் (மனேச்சர்)
வயது 75
அமரர் கந்தையா ஆறுமுகசாமி 1947 - 2022 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 20 DEC 2022 France

ஆழ்ந்த இரங்கல் ! ‘பிறப்பு இல்லாமலே நாள் ஒன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாள் ஒன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியை போல் ஒரு மாமருந்தில்லை’ - எனும் கவிஞர் வைரமுத்து அவர்களின் வார்த்தைகளில் காலமாகிய திரு கந்தையா ஆறுமுகசாமி அவர்களுக்கு இணைய வழியில் இறுதி வணக்கம் ! ஈழத் தமிழராய் பிறந்து புவியெங்கும் விசிறியெறிப்பட்டவராய் விரவித் தொடர்கிறது எமது புலம்பெயர்வு வாழ்வு. எம்மோடு 'உலகத் தமிழர்' என அடையாளமிடும் எமது அடுத்த சந்ததியினரது வாழ்வின் தொடர்ச்சி மிக அரிய அனுபவங்களைக் கொண்டவை. இவை உள்ளது உள்ளபடியானதாய் அறிக்கைகளாகப் பதிவுற வேண்டும். இது குடும்ப ஆவணங்களாகவோ சமூக ஆவணங்களாகவோ அமையலாம். இத்தகைய ஆவணத் தொகுதிகள் எதிர்காலத்திடம் சென்றடைய வழி செய்ய வேண்டும் இவரது பிரிவுத் துயரால் வாடும் அனைவரோடு நாமும் மௌனமாக சங்கமிக்கிறோம் ! நண்பர் முகுந்தன் குடும்பம் (அருந்தா, இளவேனில், இலக்கியன் - பிரான்சு) 20.12.2022