யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜ்குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உம் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உம் நினைவு
ஆறாத் துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
உங்கள் குரல் எங்கள்
காதுகளில் இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
நம்மிடம் ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த
வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
காலங்கள் போகலாம்,
காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள் என்றும்
எம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
நீங்கள் பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
மதுரமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ?
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்...
உங்கள் பாசத்திற்காக ஏங்கும்
மகன், மனைவி....
May You Rest in Peace in Gods Amen