Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1965
இறப்பு 01 JUL 2019
அமரர் கந்தசாமி இராஜ்குமார்
வயது 53
அமரர் கந்தசாமி இராஜ்குமார் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜ்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:08-07-2021


கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

 என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

 சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம் எப்போது
காண்போம் அப்பா...

கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே.....

நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
மகன், மனைவி

தகவல்: மகன், மனைவி

Summary

Photos