யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று என்ன, ஆண்டுகள் ஆயிரம்
ஓடி மறைந்தாலும் காலை நேரத்துப் பகலவனை
நிகர்த்த தங்களின் எழில் மேவு வதனம்
எம் மனத்திரைகளில் இருந்து மறைந்திடுமோ??
ஆயிரம் விண்மீன்கள் வானில் ஒளிர்ந்தாலும்
தனித்துவமாய் இப்புவிவாழ் உயிர்க்கெல்லாம்
ஒளிதரும் ஞாயிறு போல் எம் வாழ்வில் ஒளியேற்றிய
தெய்வமே! நீங்கள் மறைந்தும் ஓராண்டு ஆனதுவோ?
எம்மைப் பயிற்றுவித்து வாழ்வில் நன்நிலை
அடையச் செய்த எத்தனையோ ஆசான்களுக்கும்
மேலாய் நம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, நன்நடத்தை
எனும் விதைகளை எம் மனங்களில் விதைத்த பேராசான் நீங்களன்றோ?
முன்னைய நாட்களில் உங்கள் தோள் சாய்ந்து,
கரம்பிடித்து ஓடி விளையாடிய நினைவலைகளை
இன்று நினைக்கையில் எம் கண்கள் குளமாகி,
மனங்கள் அனலிலிட்ட மெழுகு போல் உருகுதன்றோ?
எமக்கு வேண்டியதை எல்லாம் குறிப்பறிந்து நிறைவேற்றிய
நீங்கள் இருக்கும் வரை துன்பம் என்பதே
அறிந்திலோம் நாம் உங்கள் மறைவின் பின்
இன்பம் என்பதே நாம் அறியோமன்றோ?
நீங்கள் மறைந்து ஓரண்டு ஆனாலும்
உங்கள் நினைவுகளைச் சுமந்த வண்ணம் நீங்கள் காட்டிய
பாதையில் சென்று உங்கள் கனவுகளை நனவாக்குவதே
நாம் உங்களுக்குச் செலுத்தும் அஞ்சலி
May You Rest in Peace in Gods Amen