நன்றி நவிலல்
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்
இறப்பு - 25 APR 2021
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் 2021 புற்றளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் அன்புத் தெய்வமும் எங்கள் குடும்பத் தலைவருமாய் இருந்து எங்களை நல்வழிப்படுத்திய திரு கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் உயிருடன் இருந்தவேளை உள்ளத்தால் நேசித்தவர்களுக்கும், அவர் உயிர்பிரிந்த வேளை தங்கள் அன்பையும், இரங்கல் அரவணைப்புக்களையும் தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் எங்களது அன்புத் தெய்வம் நோயுற்று இருந்தபோது, தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்து அவரை உளமார நேசித்தவர்களுக்கும், அவரது இறுதி கிரியைகளை செவ்வனே செய்து அவரது இறுதிப் பயணத்தை சிறப்புற நடைபெற ஒவ்வொருவகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் எங்கள் அன்புத் தெய்வத்தின் 31ம் நாள் நினைவையொட்டி" பூபால இதழ்" எனும் நினைவிதழை புத்தக வடிவிலும், இணைய வழியிலும் (http://www.poobal-ithazh.arul.co.uk/ ) வெளிக்கொணர்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்த போது தங்களது சிரமத்தை பாராது எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தி பலவழிகளிலும் இவ்பூபால இதழின் ஒவ்வொரு பக்கங்களும் சிறப்படைய எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும், இந்நூலினை சிறப்பாக அச்சிட உதவிய மந்திகை K.M.V அச்சகத்தினர்க்கும் உளமார நன்றி சொல்லும் தருணம் இது.

"காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்திலும் மாணப்பெரிது"

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.