Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 SEP 1969
இறப்பு 28 FEB 2019
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன்
வயது 49
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 1969 - 2019 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
மூன்று ஆண்டுகள் கழிந்தும் இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
தூக்கம் இல்லா இரவுகளை எமக்கு தந்துவிட்டு
நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே?

அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் எம் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ண்ங்களை
அறிந்திட முடியுமா?

எங்கு சென்றாலும் விடைபெற்றுச் செல்லும்
நீங்கள் போனால் திரும்பி வர முடியாத இடமென்று
தெரிந்தும் சொல்லாமல் போனதேன்?

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கிறோம் அப்பா!

மண்ணோடு மறையும் காலம்வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகள்....

உடன்பிறப்புக்கள் நினைவாக

மூன்று ஆண்டுகள் மறைந்தும்
இன்னும் முகத்தில் வாட்டம் மாறவில்லை

முடிந்து போன உன் வாழ்க்கைக்கு
 முடிச்சு போடவும் முடியவில்லை

ஊனமற்று போனது உடன் பிறப்பின் உள்ளங்கள் இன்று...
பத்து கட்டை தூரத்தில் பக்க துணையாய்
 நமக்கென தாமிருந்த காலம் மறக்க
முடியவில்லை பல நினைவுகளை

தொலை தூரம் தொடாத வானம்
அதில் கண்ணைப் பறிக்கும் நட்சத்திரம்
 போல் உன் சிரிப்பு இன்றும் நம் கண்ணுக்குள்...

அன்று போகும் பாதையில் முள்ளிருந்தும் அது
நம்மை குத்தவில்லை இன்று
முள்ளில்லா பாதையில் கூட நம்மால்
 பயணிக்க முடியவில்லை....

பல நினைவுகளை சொல்லி
படுத்துறங்கும் தம்மை
 பாதியில் எழுப்பிட மனமின்றி நிறுத்துகின்றோம்
 எழுதுவதை..


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நினைவஞ்சலி Sat, 02 Mar, 2019