முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராறு மாதங்கள் ஆறாக ஓடியதோ
என் தெய்வம் போயிப்போ வருடம் ஒன்றானதோ
ஓராறு கண்ணீரில் எம் பயணம் போயினதோ
செகத்தினிலே எனை வாழவைத்த செல்வமே மன்னவரே
விண்ணுலகு நீர் போக எம் வாழ்க்கை தடுமாற
ஆண்டவனே இது தகுமோ யாரிடம் சொல்லியழ
பொல்லாத வாழ்வினிலே பொன்னான வாழ்விழந்தேன்
நாம் வாழ்ந்த கதை கனவென்று நான் உணர்ந்தேன்
தக்கதுணை உமை பிரிந்து தனி மரமாய் ஆனோம்
போனவழி நான் வருவேன்
வானுலகு போன உம்மை வையகம் இருக்கும் வரை
உமை மறவோம் உத்தமரே!
அப்பா அப்பா என ஆயிரம் முறை அழைத்தாலும்
ஆசையோ அடங்காது அழைக்கவே மனம் ஏங்கும்
தப்பாக நாமேதும் செய்தாலும் அப்பா நீர்
தக்கவழிதனிலே கண்டிப்பீர் மனம் தாங்கும்
வீடுவெறிச்சோட வேதனையில் நாம் வாட
வேகிறது மனமெமக்கு மகிழ்சியின்றித் துயர் பாட
காடுநீர் போக களிப்பின்றி உமைத்தேட
கண்ணீரே வாழ்க்கையப்பா காட்சிதர வாருமப்பா
எம்மால் முடியவில்லை எம்மப்பா இங்கு வாழ
ஏது வழி எங்களுக்கு நீரின்றி இன்னும் வாழ
ஆண்டொன்று போனதப்பாஆசைமுகம் பார்த்து
ஆண்டவனைக் கேட்கின்றோம் அப்பா உமைச்சேர
மீண்டும் நாம் வாழ்வதற்கு கால மொன்று வாராதோ
வந்திட்டால் வந்து விடும் வள்ளலே எம்மப்பா
ஈராறு மாதங்கள் ஓடி மறைந்தன
ஓயவில்லை நம் விழியோரம் ஓடும் கண்ணீர் துளிகள்
ஒரு முறை ஓடி வாராயோ
மறுபடியும் உன்முகம் காட்டாயோ
சிரித்து பல நாளாச்சு
சொந்தம் ஒன்று கூடி பல மாதம் ஆச்சு
அண்ணன் இல்லா வாழ்வில்
அச்சமின்றி வாழ்ந்தாலும்
அன்பு காட்ட யாருண்டு?
துயரங்கள் தீர்த்திடும் தூய உள்ளம் கொண்டவரே
துடிக்கும் உன் உறவுடன்
மீண்டும் ஒர் முறை வாழவேண்டும்...