முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இக வாழ்வில் இசைவுடனே வாழ்வளித்த மன்னவரே
நெஞ்சில் எமக்கு உரமூட்டி நேர்மைவழி காட்டியவரே
கஷ்டமதை நீக்கி பார்வாழ்வில் பலம் நாட்டியவரே
காலம் வந்ததென்று காலனுடன் போனீரோ
ஞாலவாழ்வொழித்தாலும் எம் ஞாபகத்தில் நிலையானவராம்
எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிட்டு உங்களை
பிரிந்து வாழ்வதென்பதை சொல்லித்தர மறந்து போனீரே
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்துவிட்டு தாங்கமுடியாத
துயரத்தை தந்துவிட்டு எங்கு தான் சென்றீரோ
நீங்கள் மறைந்து போனபின்பும் உங்கள் நினைவுகளை
சுமந்த உறவுகளின் நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதைய்யா!
விதியென்று மனமாற முடியவில்லை வேகமாய் நீர்
விரைந்துவிட கண்ணீரில் நாம் கரைந்துவிட
பாராண்டு முடிந்ததென்று பரமனிடம் போனீரோ!
ஈராண்டு ஆனதுவோ உண்மையோ இது பொய்யோ
ஆனாலும் உமை மறவோம் அஞ்சலிப்போம் அனுதினமும்
ஓம் சாந்தி
அப்பா எம்மப்பா என அல்லும் பகலும் நாம்
செப்பாத நாளில்லை தப்பாமல் இங்கே நாம்!
திங்கள் வதனமெங்கே உம் தித்திக்கும் மொழி எங்கே!
உங்கள் உயிரிங்கே எழிலுருவம் போனதெங்கே!
ஊணுமிப்போ பிடிக்குதில்லை உறக்கமும் இல்லையப்பா
தேனும் சுவைக்கவில்லை தேற்றி விட யார் அப்பா!
நீங்களில்லா எம் வீடு எங்களுக்கோர் சுடுகாடே!
கனவினிலே என்றாலும் காட்சி கொடும் எம்மப்பா?
தினமினிமேல் வந்தெமக்கு முத்தமிடும் எம்மப்பா!
நூறாண்டு வாழுமப்பா வானுலகில் மனம் நிறைந்து
ஈராண்டு நினைவின்று உம் மக்கள் நாம் அஞ்சலித்தோம்
பாதியிலே பிரிந்தாலும் எமக்கு பாதை காட்டிய
தெய்வம் நீங்கள் அப்பா! ஓம் சாந்தி
அன்புள்ள அண்ணாவுக்கு
கண்ணிமைப் பொழுதினில் ஈராண்டு
காலம் ஓடி மறைந்தனவோ
கட்டி அழுதிட்ட சத்தம் இன்னும் ஓயவில்லை காதோரம்
சொர்க்கத்தில் வீடுண்டோ அங்குநாம்
வர அனுமதியுண்டோ
முகவரி இன்னும் கிடைக்கவில்லை
அனுப்பிவிடவும்
மனைவி சுகம் பிள்ளைகள் சுகம்
சகோதரர்கள் சுகம்
மருமக்கள் சுகம்
அறிந்ததுண்டோ யாவரும் நலம் இங்கு
தாம் சொர்க்கத்தில் உள்ள செய்தி
என்னவோ அறியத்தரவும்
தரவும்.
இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்
இன்று எம் காதில் ஒலிக்கிதடா உன் குரல்
எம் இதயம் துடிக்கிறதை நீ! அறிவாயோ
எம்மை தவிக்க விட்டு போக உன் விதி மாறிய ஏன்
கண்மூடி தூங்கினாலும் கனவிலும் உன்குரல்
கண்கலங்கி நிற்கும் காரணத்தை நீ! அறிவாயோ
காரணம் எதுவும் தெரியாமல்
கடும் துயரில் உன் குடும்பம் இருக்கும் நிலை நீ! அறிவாயோ
கடுகதி வருதை கண்முடித்தனமாய் மறந்தது ஏனோ!
காலம் வந்துதான் உன் கால் தடுமாறியதோ!
விண்ணுலகில் நீ! வாழ விதி வந்து போனது ஏன்!
ஏடு எடுத்து பார்க்க முடியாத உன் வாழ்வு
என்றும் உன் ஆத்மா சாந்தியடைய
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!